Thursday, July 16, 2015

சீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கோரி 42 ஆயிரம் பேர் விண்ணப்பம்


பீஜிங், சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு இத்திட்டம் தளர்த்தப்பட்டது. தகுதியுள்ள தம்பதிகள் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அனுமதி வழங்கியது.


சீனாவில்  நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,000 ஆயிரம் தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

அதில் 38,000 ஆயிரம் தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தம்பதிகள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

சீனாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக பீஜிங் சுகாரத்துறை மற்றும் குடும்ப கட்டுப்பாடு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Disqus Comments