Saturday, July 11, 2015

தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் - அப்துல்கலாம்


தூக்கு தண்டனையை இந்தியாவில் முற்றாக ஒழிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார். 

சமூக, பொருளாதார அடிப்படையில், இந்தியாவில் கொடிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையான தூக்கு தண்டனை முறையை ஒழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தான் ஜனாதிபதியாக பதவி வகித்த போது, தூக்கு தண்டனை குறித்து முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அந்த தண்டனையை உறுதி செய்வதில் மிகுந்த வலியை தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நிலுவையில் இருக்கும் தூக்கு தண்டனைகளையும் ஒழிக்க வேண்டும். 

பகை காரணமாகவும், உள்நோக்கம் இல்லாமலும் செய்யப்படும் குற்றங்களுக்கும் நாம் தண்டனை வழங்குகிறோம். 

நான் ஜனாதிபதியாக இருந்த போது ஒரே ஒருவருக்கு மட்டுமே தூக்கு தண்டனையை உறுதி செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
Disqus Comments