Monday, July 27, 2015

விவசாயத்தை பாதுகாக்க முடியாத ஆட்சியாளர்கள் - அனுரகுமார


தேசிய விவசாயத்தையும், விளை நிலங்களையும் பாதுகாக்க முடியாத ஆட்சியாளர்களே இலங்கையில் இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம்சுமத்தியுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களாயினும், பழங்களாயினும் அதனை உரிய முறையில் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியாத போக்குவரத்து கட்டமைப்பே செயற்படுகின்றது.

இந்தியாவில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்து அதனை கொழும்பு துறைமுகத்;தில் இறக்கி அதற்கு 25 ரூபா வரியையும் சேர்த்து வெலிமடையில் சென்று விற்பனை செய்யும் போது அங்குள்ள உருளைக்கிழங்கை விட மலிவாக இருக்கிறது.

ஆனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் செலவு இறக்குமதி விலையை விட அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக மாம்பழம் உற்பத்தியாகும் பருவ காலத்தில் அதனை எந்தவித பாதுகாப்பு முறைகளும் இன்றி பாரவூர்திகளில் ஏற்றுகின்றனர்.

வரக்காபொல பிரதேசத்தில் வாழைப்பழங்களையும், பின்னர் நிட்டம்புவ பிரதேசத்திற்கு சென்று அன்னாசியையும் ஏற்றுகின்றனர்.

அதனையடுத்து பாரவூர்தி நகர்;ந்து கொழும்பை அடையும் அவை அனைத்தும் பழச்சாறாக நுகர்வோரிடம் செல்கின்றன.

இவ்வாறு சாதாரண உற்பத்திப் பொருட்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத நிர்வாகிகளே ஆட்சிக்கு வருகிறார்கள் என கிளிநொச்சியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Disqus Comments