டொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, குறித்த நபர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளமையை அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் கட்சி யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது