Saturday, July 25, 2015

இலங்கை I.S.I.S. குடும்பம் இலங்கையை விட்டு பாகிஸ்தானில் குடியேற்றம்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் சம்பவமொன்றில் குறித்த இலங்கையர் கொல்லப்பட்டிருந்தார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சந்தேக நபரின் குடும்பமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
சந்தேக நபரின் குடும்பத்தினர் கண்டி கலகெதர பிரதேசத்தில் வசித்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் ஓராண்டுக்கு முன்னதாகவே கலகெதர பிரதேசத்தை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அபு சுரேய் செய்லான் என்ற 37 வயதான குறித்த சந்தேக நபர் கலகெதர பிரதேச சர்வதேச பாடசாலையொன்றின் அதிபராகவும் கடயைமாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் குடும்ப பின்னணி தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Disqus Comments