( சொர்ணகுமார் சொரூபன் - TM) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 23ஆம் திகதி, 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையும் இடம்பெறவுள்ளது. அனைத்து பரீட்சைகளும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி முடிவுக்கு வருகின்றன.
இந்நிலையில், பரீட்சை முறைகேடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்காக பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
பரீட்சை எழுதும் மாணவர்களை குழப்பும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரத்தை மேற்கொள்ளுதல், ஒலி எழுப்புதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் கூறியது.