Monday, July 27, 2015

UNP வென்றால் ஏனைய துறையினர் போன்று தோட்டத்துறையினருக்கும் சம்பள உயர்வு

இலங்கையில் ஐக்கிய தேசிய முன்னனி ஆட்சிக்கு வந்தால், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களிளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மலையகத்தின் தலைநகரான நுவரேலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூ;ட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
ஏனைய துறையினர் போன்று தோட்டத்துறையினருக்கும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று ரணில் கூறினார்.
மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தற்போது தடைப்பட்டுள்ளது.
தற்போது இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்படிக்கையொன்றின் காரணமாக இலங்கையிலிருந்து மீண்டும் இரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அதற்கான நடிவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தனது உரையில் ரணில் குறிப்பிட்டார்.
தோட்ட மக்களுக்கு காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்றும் 10 வருடங்களுக்கு மேடலாக அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உரிமைகளும் வழங்கப்படும் என்றும் பிரதம மந்திரி கூறினார்.
Disqus Comments