(THANKS TO NAVAMANI) இம்மாதம் 17ம் திகதி நடை பெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டம் தேர்தல் தொகுதியில் 2014ம் ஆண்டு பதிவு செய்த வா
க்காளர்களின் படி 553009 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
புத்தளம் தேர்தல் தொகுதியில் 5 தேர்தல் பிரிவுகள் உள்ளன. அவற்றில்
புத்தளம் பிரிவில் – 125702 வாக்காளர்களும்,
சிலாபம் பிரிவில் – 118171 வாக்காளர்களும்,
ஆனமடுவ பிரிவில் – 112978 வாக்காளர்களும்,
வென்னப்புவ பிரிவில் – 106183 வாக்காளர்களும்,
நாத்தாண்டிய பிரிவில் – 89975 வாக்காளர்களும்,
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
புத்தளம் பிரிவில் – 125702 வாக்காளர்களும்,
சிலாபம் பிரிவில் – 118171 வாக்காளர்களும்,
ஆனமடுவ பிரிவில் – 112978 வாக்காளர்களும்,
வென்னப்புவ பிரிவில் – 106183 வாக்காளர்களும்,
நாத்தாண்டிய பிரிவில் – 89975 வாக்காளர்களும்,
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்தோடு தபால் மூல வாக்களிப்பிற்காக 10253 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
புத்தளம் மாவட்டம் தேர்தல் தொகுதியில் மொத்தம் 400 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளது.
அத்தோடு 04 வாக்கெண்ணும் நிலையங்கள் நிறுவப்படவும் உள்ளது. அவை
அத்தோடு 04 வாக்கெண்ணும் நிலையங்கள் நிறுவப்படவும் உள்ளது. அவை
புத்தளம் மாவட்ட செயலகம்.
பு / ஸாஹிரா தேசிய பாடசாலை.
பு/பாத்திமா பாடசாலை.
பு /செய்ன்ப் ஆரம்பப் பாடசாலை
ஆகியவை வாக்கெண்ணும் நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இது காலவரை வாக்கெண்ணும் நிலையமாக செயற்பட்டுவந்த பு / சென்அன்ட்றூஸ் வித்தியாலயம் க.பொ.த.(உயர் தரம்) பரீட்சை நிலையமாக உள்ளதால் அது வாக்கெண்ணும் நிலையமாக தெரிவு செய்யப்பட வில்லை.
அத்தோடு புத்தளம் தேர்தல் தொகுதியில் தேர்தல் கடமைகளுக்காக 9003 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு விசேட கொத்தனி வாக்களிப்பு நிலையங்கள் புத்தளத்தில் இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் வதியும் மக்களின் நன்மை கருதி, இங்கு வாக்களிக்கக் கூடிய வகையில் விசேட வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் 8875 பேர் புத்தளம் விசேட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இடம்பெயர்ந்த வன்னிமாவட்ட வாக்காளர்களுக்கென 17 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.
முல்லைத்தீவு வாக்காளர்களுக்கு விசேட 02 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
பு / நுரைச்சோலை ம. வித்தியாலத்தில் 02 வாக்காளர்களும்
பு / றிஸாட் பதியுதீன் ம. வித்தியாலத்தில் 59, முல்லைத்தீவு வாக்காளர்களுமாக மொத்தமாக 61 முல்லைத்தீவு வாக்காளர் இங்கிருந்து வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பு / றிஸாட் பதியுதீன் ம. வித்தியாலத்தில் 59, முல்லைத்தீவு வாக்காளர்களுமாக மொத்தமாக 61 முல்லைத்தீவு வாக்காளர் இங்கிருந்து வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஏனைய 8814 மன்னார் மாவட்ட வாக்காளர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ள 15 விசேட வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தோர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமையால் யாழ் மாவட்டத்துக்கென விசேட வாக்குச்சாவடிகள் எதுவும் இங்கு வைக்கப்பட வில்லை.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சில மதஸ்தளங்களின் நிர்வாகிகள் அரசியலில் ஈடுபடுவதாக எமக்கு சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மதஸ்தளங்களின் நிர்வாகிகள் இவ்வாறான விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். கபீர் நவமணிக்கு தெரிவித்தார்.