தென்கொரியாவில் கடற்றொழில்துறையில் நிலவும் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகப் பரீட்சைக்காக 4590 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விண்ணப்ப்ப்படிவங்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருகோணமலை, இரத்தினபுரி, இரத்மலானை, அனுராதபுரம், சிலாபம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா பிராந்திய பயிற்சி நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதில் சுமார் 700பேர் தெரிவுசெய்யப்படுவார்கள் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன.
தென்கொரிய வேலை வாய்ப்புகளுக்காக வருடத்தின் முதல் 9 மாதங்களில் 5599 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.