Sunday, October 11, 2015

பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம்

(NF)பாடசாலைகளின் வகுப்பறைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை 40 இலிருந்து 35 வரை குறைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் வருடத்திற்கு ஒரு மாணவன் என்ற ரீதியில் 5 ஆண்டுகளுக்குள் 5 பேரை வகுப்பறைகளிலிருந்து குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் டப்ளியூ பந்துசேன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் முகங்கொடுக்கும் நடைமுறை ரீதியான பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் சர்வதேச செயன்முறைக்கு ஏற்ப எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வகுப்புக்களில் இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் தரத்தக்கு பிள்ளைகளை இணைத்துக் கொள்ளும் போது ஒரு வகுப்பறைக்கு 35 பிள்ளைகள் என்ற ரீதியிலேயே இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என இதற்கு முன்னர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை சுட்டிக்காட்டதக்கது.
Disqus Comments