Sunday, October 11, 2015

Facebook அறிமுகப்படுத்தும் லைக் பட்டனுடன் சோகம்,சந்தோஷம் என ஆறு வகையான பட்டன்கள்-(video)

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படுவது பற்றி பரிசிலித்து வருவதாக கடந்த மாதம் மார்க் சக்கபேர்க் அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக 6 உணர்வுகளை வெளிப்படுத்தும் புதிய பட்டன்களை சோதனை அடிப்படையில் இன்று முதல் சோதனையாக ஸ்பெயின் மற்றூம் அயர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. பின்னர் உலகம் முழுதும் பாவிக்கும் வகையில் வசதி செய்யப்படும்.
இந்த புதிய 6 பட்டன்களும் லைக் பட்டனுக்கு பக்கத்தில் தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.





Disqus Comments