Monday, October 19, 2015

அளுத்கமையை புணா் நிா்மாணம் செய்த முப்படை கௌரவிக்கப்பட்டது

2013 ம் ஆண்டு அளுத்கம பிரதேசத்தில் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது சேதமடைந்த  இடங்களை புனர்நிர்மாணம் செய்யும் பணி முப்படை இராணுவ வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது. மேற்கு கட்டளைத்தளபதி. மேஜர் ஜெனரல் உதய மடவள அவர்களின் தலைமையில் இயங்கிய முப்படை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் குழுவினரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (16.10.2015) பேருவளை, தர்கா நகரில் உள்ள இஷா அதுல் இஸ்லாம் அநாதை இல்லத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் Dr.ராஜித சேனாரத்ன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.





Disqus Comments