-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு, நெல்லிக்காடுக் கிராமத்தில் திங்கட்கிழமை (19) நள்ளிரவு யானை தாக்கியதில், கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கிராமத்தினுள் புகுந்த யானை, இவர்கள் வசித்துவந்த குடிசையைத் தாக்கியுள்ளது. இதன்போது கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ரி.மோகனதாஸ் (வயது 30), சுயமலர் (வயது 17) ஆகியோரே யானையின் தாக்குதலுக்குள்ளாகினர். இவர்கள் இருவரும் திருமணமாகி சுமார் 10 மாதங்களாக குடிசையில் வசித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -