Wednesday, November 11, 2015

12 ஆம் திகதி துக்க தினம்: தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

மரணித்த சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளமையால் அத்தினத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
சுற்றறிக்கையொன்றினூடாக இந்தத் தகவலை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
இயற்கை எய்திய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதேவேளை, சோபித தேரரின் மறைவையொட்டி மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பிரிவெனாக்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Disqus Comments