Saturday, March 19, 2016

புத்தளம் பள்ளவாசல்துறையில் மாபெரும் இரத்த தான முகாம் 20ம் திகதி

எதிர்வரும் 20.03.2016 (நாளை) ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்துறை  கிளை சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.

இது அவர்களின் முதலாவது இரத்த தான முகாமாகும். இன்ஷா அல்லாஹ் (நாளை) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பள்ளிவாசல் துறை கிளினிக் சென்டரில் இவ்விரத்த தான முகாம் நடைபெற உள்ளது. 

இம்மகத்தான மனித நேய பணிக்கு இன, மத, மொழி பேதமின்றி ஆண், பெண் இரு பாலாரும் பங்கேற்று  இரத்த தானம் செய்து மனித உயிர்களை பாதுகாக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்.

தகவல்: எம்.எஸ். முஹம்மது
Disqus Comments