Tuesday, March 22, 2016

2015ம் ஆண்டு பெறுபேறுகளின் படி நாடளாவிய ரீதியில் 6,012 மாணவர்களுக்கு 9ஏ சித்தி!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6,012 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 274,324 பாடசாலை பரீட்சார்த்திகளில் 189,428 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்க தகுதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 69.33 வீதமான மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், 83,796 மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments