Tuesday, March 22, 2016

க.பொ.த பெறுபேறு மீளாய்வுக்கு எதிர்வரும் ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்

2015ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ள திணைக்களம் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தை விரைவில் ஊடகங்களினூடாக வௌியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது
Disqus Comments