Wednesday, April 27, 2016

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி: ரூ.2.04 கோடி கடன் - வேட்பு மனுவில் தெரிவிப்பு.

முதல்வர் ஜெயலலிதா தனக்கு ரூ. 118 கோடியே 40 இலட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவுக்கு ரூ.2.04 கோடி அளவுக்கு கடன் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனு தாக்கலின்போது, சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த விவரத்தில் தவறுகள் இருப்பின், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது.சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ. 118 கோடியே 40 லட்சத்து 11 ஆயிரத்து 775 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 5-ம் திகதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் தனக்கு ரூ. 117 கோடியே 13 லட்சத்து 89 ஆயிரத்து 637 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 11 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 அதிகரித்துள்ளது.
சென்னை, ஆர்.கே. நகரில் போட்டியிடும் ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, ஜெயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும். இதில், வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.41.63 கோடி. நிலம், கட்டிடம் போன்ற அசையா சொத்துக்களின் மதிப்பு, ரூ.76.95 கோடியாகும். மேலும், தனக்கு ரூ.2.04 கோடி கடன் இருப்பதாகவும் ஜெயலலிதா வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது, ஜெயலலிதா சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, தாக்கல் செய்திருந்த சொத்து விவரத்தை பாருங்கள்: 2013-2014-ம் ஆண்டு வங்கிக் கணக்குப்படி மொத்த வருமானம்: ரூ.33,22,730, கையிருப்பு ரூ.39,000, வங்கி கணக்கில் சேமிப்பு தொகை, 9 கோடியே 80 இலட்சத்து 9,639 ரூபாய், மைலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி கணக்கு உள்பட, வழக்கில் முடக்கப்பட்ட தொகை - ரூ.2 கோடியே 47 இலட்சத்து 74,945 ரூபாய். ஐந்து நிறுவனங்களில் தொழில் முதலீட்டு தொகை ரூ.31 கோடியே 68 இலட்சத்து 82,808, 9 சொந்த வாகனங்களின் மதிப்பு ரூ.42,25,000, வெள்ளிப் பொருட்கள் 1,250 கிலோ (ஒரு கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் மொத்த மதிப்பு 3 கோடியே 12 இலட்சத்து 50,000 ரூபாய்.
வழக்கில் முடக்கப்பட்ட தங்க நகைகள் 21,280.300 கிராம். காஞ்சீபுரம், ஹைதரபாத்தில் இருக்கும் 17.93 ஏக்கர் விவசாய நிலங்களின் மதிப்பு ரூ.14 கோடியே 78 இலட்சத்து 37,300, சென்னை போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வணிக கட்டிடங்களின் மதிப்பு - 13 கோடியே 34 இலட்சத்து 70,990 ரூபாய், போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு ரூ. 43 கோடியே 96 இலட்சத்து 74,900 ரூபாய். ஒட்டுமொத்த அசையா சொத்தின் மதிப்பு - 72 கோடியே 9 இலட்சத்து 83,190 ரூபாய், ஒட்டுமொத்த அசையும் சொத்தின் மதிப்பு - 45 கோடியே 4 இலட்சத்து 6,447 ரூபாய். ஜெயலலிதா பெயரில் உள்ள மொத்த வங்கிக் கடன் மதிப்பு ரூ.2 கோடியே 4 இலட்சத்து 2,987. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
5 ஆண்டுகளில் இரட்டிப்பான சொத்து மதிப்பு: கடந்த 2011 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தனக்கு ரூ. 51 கோடியே 40 இலட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ. 67 கோடி அதிகரித்துள்ளது. 
Disqus Comments