Sunday, April 10, 2016

55 வயதில் 3 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற இங்கிலாந்து பாட்டி!

(INR ) லண்டன் (07-04-16): பிரிட்டனை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனில் கிளாம் ஷரோன் கட்ஸ் என்ற 55 வயதுடைய பாட்டி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர் தான் பிரிட்டனின் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த மிக அதிக வயதுடையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நான்கு குழந்தைகளுக்கு பாட்டியான இவர் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இந்த 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இதுவரை பிரிட்டனில் அரசு மருத்துவமனைகளில் 42 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே செயற்கைக் கருத்தரிப்பு சேவைகளை வழங்கி வருவதால், அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று இந்த மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறக்கும்போது மிகவும் வயதான தோற்றம் இருக்கக் கூடாது என்பதற்காக, வயதைக் குறைத்து காட்டுவதற்கான மருத்துவத்தை மேற்கொண்டதாக ஷரோன் தெரிவித்தார்.
55 வயதில் 3 குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஆபத்தானது என்பதால் மூன்றில் ஒரு குழந்தையைக் கலைத்துவிடும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அதற்குத் தான் மறுத்து விட்டதாகவும அவர் கூறினார்.
Disqus Comments