Saturday, April 16, 2016

ஜப்பானில் 7.3 ரிச்டர் அளவிலான பாரிய நில நடுக்கம் - பலர் பலி (Photos)

இன்று காலை ஜப்பானில் சுமார் 7.3 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் படு காயமடைந்துள்ள அதே வேளை பலர் சரிந்து விழுந்த கட்டடங்களுக்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட தீச்சம்பவங்கள் மற்றும் மின்சார ஒழுக்கு காரணமாக மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதான நில நடுக்கத்தை அடுத்து சுமார் 50 சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இ ந் நிலையில் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 




Disqus Comments