Thursday, April 7, 2016

தேசியப் பட்டியலும், கோலூன்றிப் பாயப் பயன்படும் கோலும் ஒன்று. எமக்கு ஏற்றாப் போல் வளையும்.

(Mujeeb Ibrahimகோலூன்றிப்பாய்தல் ( Pole Vault) விளையாட்டினை பற்றி அறிந்திருப்பீர்கள். நிஜமாகவே Pole Vaulters இற்கு முதுகெலும்பு அதிகம் வளையும் தன்மை கொண்டது, அதிக உயரங்களை கோலின் மூலம் ஊன்றி முதுகை வளைத்து பாய்வதையே Paul Vault விளையாட்டு குறிக்கிறது.
அரசியல் பரப்பில் கட்சி தாவிகளை Pole Vaulters என்பர்.
நேற்று இடம்பெற்ற புதிய மூன்று அமைச்சு பதவிகளின் பிரமாணங்களில் இரண்டு Pole Vaulters இருந்தார்கள்.
மனுஷ்ய நாணயக்கார மற்றவன் லக்‌ஷ்மன் செனவிரட்ன.
தனியார் தொலைக்காட்சியொன்றில் அறிவிப்பாளராக வேலை செய்த மனுஷ்ய ஐ. தே. கட்சி மூலம் முதன் முறையாக பாராளுமன்றத்துற்கு தெரிவாகி சற்றுக்காலத்திலேயே மஹிந்த அரசுடன் இணைந்து கொண்டவர்.
கடந்த தேர்தல்களின் மஹிந்தவுக்கு ஆதரவாக தீவிரமாக உழைத்தவர்.
மஹியங்கனைத்தொகுதியில் ஐ. தே. கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த லக்‌ஷ்மன் , கடந்த ஆட்சியில் ஐ. தே. கட்சி கடுமையான பின்னடைவுகளை சந்தித்த வேளையொன்றில் கட்சியை உதறிவிட்டு அரசில் இணைந்து சீனி அமைச்சராக ஆனவர்.
இந்த இரண்டு முன்னாள் ஐ. தே. கட்சிகார்ர்களுந்தான் நேற்று மைத்ரியோடு இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றிருக்கிறார்கள்.
நேற்றைய பதவி வழங்கல்களோடு நாட்டின் கெபினட் மந்திரிகளின் எண்ணிக்கை 47 ஆகவும், பிரதி அமைச்சர்களின் தொகை 25 ஆகவும், ராஜாங்க அமைச்சர்களின் தொகை 20 ஆகவும் ஆகியிருக்கிறது!
ஆக மொத்தத்தில் 92 பேர் அமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள்.
இன்னும் சில காலத்தில் இந்த எண்ணிக்கை எகிறி மஹிந்த காலத்து அமைச்சர்களின் எண்ணிக்கையினையும் தூக்கி விழுங்கப்போவது திண்ணம்.
நல்லாட்சியின் கூறுகளில் ஒன்றாக அமைச்சர்களின் எண்ணிக்கையினை 35 ஆக பேணுவோம் என்ற அழகிய வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை அமுல்படுத்த முடியாமல் படு தோல்வியினை சந்தித்திருக்கிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் மூலம் பதவிகளை வழங்கிய மைத்ரியின் தீர்மானமே நல்லாட்சி எண்ணக்கருவினை தகர்த்தெறிந்த முதலாவது வெடி குண்டாகும்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட, அப்பச்சிக்கு பக்கபலமாய் இருந்து அவரது அரசில் பல் வேறு ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட பலர் இந்த நியமனத்தின் மூலம் மீண்டும் அரசியல் அதிகாரத்தினை பெற்றனர்.
அதுதான் நல்லாட்சிக்கு அடிக்கப்பட்ட முதலாவது சாவு மணியாகும்!
கட்சியா? தேசமா? என்ற கேள்விகள் எழுந்த இடங்களில் தனது செல்வாக்கை தக்கவைக்க பிரயத்தனப்பட்டு ஜனாதிபதி மைத்ரி பல இடங்களில் தடுமாற்றம் கண்டுள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அப்பச்சி காலத்து ஊழல் பேர்வழிகள், கட்சி தாவிகள் என்போர் மைத்ரிக்கான தமது ஆதரவை தெரிவிக்க முனையும் போது அதனை அப்படியே நம்பி அவர்களை பதவிகளால் அலங்கரித்து விடுகிறார்.
தமது எதிர்கால அரசியல் இருப்பை அவர்கள் காப்பாற்றுவர் என்ற மைத்ரியின் நம்பிக்கை வீணானது!
ஒரு இக்கட்டான கட்டத்தில் அந்த நம்பிக்கை தகரும்!
அப்போது இந்த கட்சி தாவிகள் வேறொரு முகாமில் பதவிகளுக்காக வரிசையில் நிற்பர் என்பது நிச்சயம்!
Pole Vaulters இற்கு முதுகெலும்பு அதிகம் வளையும் தன்மை கொண்டது என்பதை அறிந்தோம்.
அது போலத்தான் கட்சி தாவிகளான நமது Pole Vaulters களும் பதவிக்காக வளைந்து வளைந்து முதுகெலும்பிலிகளாக மாறிவருவதை அவதானிக்கலாம்....
இங்கே இணைக்கப்பட்டுள்ள நேற்றைய Pole Vaulter ஒருவரின் வளைதலை காட்டும் புகைப்படமே இவ்வளவையும் எழுத வைத்தது !
Disqus Comments