Tuesday, April 12, 2016

சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல் - புளிச்சாக்குளம். இம்தியாஸ் ஹாபிழ்

(புத்தளம் ஆன்லைன்) புத்தளம் புளிச்சாக்குலத்தின் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயதான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் இம்தியாஸ் அவர்கள் இரு சிறு நீரகமும் செயலிழந்த நிலையில் அவதியுறுகிறார்.
ஒரு வயது பெண் குழந்தைக்கு தந்தையான இவர், கொழும்பு வெல்லம்பிட்டிய தாருல் உலூம் அல் ஹுமைதியா அரபுக்கலாசலையில் பட்டம்பெற்று வெளியேறிய ஒரு ஆலிம் ஆவார். அத்தோடு புனித அல் குர்ஆனை முழுமையாக மனம் செய்த ஒரு ஹாபில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 9 வருடங்களாக நீர்கொழும்பு தாருல் புர்கான் அரபு மத்ரஸாவில் உஸ்தாதாக கடமையாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இவருடைய சிறு நீரகங்கள் செயலிழந்திருப்பது வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
அந்நாளிலிருந்து மருத்துவம் செய்து வரும் இவர் தொடர்ந்தும் உடல் நிலை தேராத நிலையில் (தொழில் செய்ய இயலாத காரணத்தால்) தற்போது தொழிலையும் விட்டு விட்டு வீட்டிலேயே இருக்கிறார்.
இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு 1500,000.00 (பதினைந்து இலட்சம்) செலவாகும். தற்போது குறிப்பிட்ட ஒரு சில தனவந்தர்களால் 225,000.00 வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகையையே இவர் தனவந்தர்களிடம் எதிர்ப்பார்த்து நிற்கின்றார்.
ஆலிம் ஒருவரிற்கு உதவி செய்து மறுமையிலும் இம்மையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களது வாழ்கையில் அருள்பாளிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!
Address:
Mou. M. I. M Imthiyaz (Humaidhi)
No: 27,
Puthukudiyiruppu,
Bathulu oya,
Puttalam.

Contact No: 0702055480, 0773000125
Blood group: AB +
Bank Account :
Mohamed Ismail Mohamed Imthiyaz
Amana bank – 0110159623001 Negombo Branch

Further detail:
H. M Ismail (Father)- 0719243829.





Disqus Comments