Tuesday, April 12, 2016

சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கப்படும் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்.

(
(அ(z)ஸ்ஹான் ஹனீபா)
இன்று அதிகமாக சமூக வலைத்தளங்களில் போலியான 

ஹதீஸ்கள் , சிந்தனைகள் சர்வ சாதாரணமாக  பரப்பப்படும் நிலை தலைவிரித்தாடுகின்றது . இதே தொடரில் அண்மைக்காலமாக பின்வரும் போலி சிந்தனையும் பகிரப்படுவதோடு பரப்பப்பட்டு மூடநம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது . 
முதலில் அந்த போலி செய்தியை அறியத்தந்ததும் பின்னர் அதற்குரிய விளக்கங்களை தரலாம் என நினைக்கின்றோம்



/// "  If u love Allah: Send dis 99names to 11 Muslims, your biggest problem will be solved
Ya ALLAH



۞ الله ۞ الرحمن ۞ الرحيم ۞ الملك ۞ القدوس ۞ السلام ۞ المؤمن ۞ المهيمن ۞ العزيز ۞ الجبار ۞ المتكبر ۞ الخالق ۞ البارئ ۞ المصور ۞ الغفار ۞ القهار ۞ الوهاب ۞ الرزاق ۞ الفتاح ۞ العليم ۞ القابض ۞ الباسط ۞ الخافض ۞ الرافع ۞ المعز ۞ المذل ۞ السميع ۞ البصير ۞ الحكم ۞ العدل اللطيف ۞ الخبير ۞ الحليم ۞ العظيم ۞ الغفور ۞ الشكور ۞ العلي ۞ الكبير ۞ الحفيظ ۞ المقيت ۞ الحسيب ۞ الجليل ۞ الكريم ۞ الرقيب ۞ المجيب ۞ الواسع ۞ الحكيم ۞ الودود ۞ المجيد ۞ الباعث ۞ الشهيد ۞ الحق ۞ الوكيل ۞ القوي ۞ المتين ۞ الولي ۞ الحميد ۞ المحصي ۞ المبدئ ۞ المعيد ۞ المحيي ۞ المميت ۞ الحي ۞ القيوم ۞ الواجد ۞ الماجد ۞ الواحد ۞ الأحد ۞ الصمد ۞ القادر ۞ المقتدر ۞ المقدم ۞ المؤخر ۞ الأول ۞ الآخر ۞ الظاهر ۞ الباطن ۞ الوالي المتعالي ۞ البر ۞ التواب ۞ المنتقم ۞ العفو ۞ الرءوف ۞ مالك ۞ الملك ۞ ذو ۞ الجلال ۞ والإكرام ۞ المقسط ۞ الجامع ۞ الغني ۞ المغني ۞ المانع ۞ الضار ۞ النافع ۞ النور ۞ الهادي ۞ البديع ۞ الباقي ۞ الوارث ۞ الرشيد ۞ الصبور


اللهم ارزق من نشرها الفردوسئ الاعلى

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவாராக இருந்தால் இந்த 99 பெயர்களையும் 11 முஸ்லிகளுக்கு அனுப்புங்கள் . உங்களை கவளையில் ஆழ்த்தும் பிரச்சினை நீங்கும் ,,,யா அல்லாஹ் !" 


அந்த செய்தி முடிவுற்றது .///
தெளிவு : 

///  If u love Allah: Send dis 99names to 11 Muslims, your biggest problem will be solved
Ya ALLAH 


நீர் அல்லாஹ்வை நேசித்தால் இந்த 99 திருநாமங்களை 11 முஸ்லிம்களுக்கு அனுப்பு , அவ்வாறு செய்தால் உனது மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் ( நீங்கும் ) .///

முதலில் இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை . உண்மையில் இவ்வாறு பிரச்சினைக்கு தீர்வு இருக்குமானால் எவருக்கும் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை .  இது நபியினால் கூறப்பட்ட ஹதீஸோ அல்லது ஸஹாபாக்கள் மற்றும் பின்வந்தவர்களின் " அஸர் " எனும் வார்த்தையோ கிடையாது . 

எவராவது இதனை ஹதீஸ் என வாதிட்டால் அவருக்கு நபியவர்கள் தமது திரு வாயால் மொழிந்த ஹதீஸே எச்சரிக்கையாக அமைந்து விடும் . நபியவர்கள் கூறினார்கள் " எவர் என் மீது வேண்டுமென்றே பொய்யை இட்டுக்கட்டுகிறாரோ அவர் நரகை ஒதுங்கும் தளமாக ஆக்கிக் கொள்ளட்டும் . " ஆதாரம் (புகாரி )  .
ஆக இதனை ஹதீஸ் என்றோ மார்க்கம் என்றோ நம்புவது பாவமாகும் . அத்தோடு இதனை பரத்தாமல் இருப்பதால் எவரும் அல்லாஹ்வை நேசிக்காதவராக ஆகமாட்டார் .  மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவற்றை செய்வது தான் மார்க்கமே தவிர , இவ்வாறான போலியான செய்திகளை நம்பி இதை பரத்தாமல் விடுவதால் இறைவன் கோபிப்பான் என்ற நிலைப்பாடு மார்க்கத்தில் இல்லவே இல்லை . 



அடுத்ததாக அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளவர் எவர் அதனை மனனம் செய்கின்றாரோ அவர் சுவனில் நுழைவார் " என்பது  புகாரி முஸ்லிமில் பதியப்பட்ட  ஆதாரபூர்வமான உறுதியான ஹதீஸ் ஆகும் . 
روى البخاري (2736) ومسلم (2677) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ) ." 


ஆனால் நாம் இந்த ஹதீஸை கட்டாயம் தெளிவாக விளங்க வேண்டிய அவசியம் இருக்கின்றது .

1 : இந்த ஹதீஸின் அர்த்தம் 99 திருநாமங்கள் மாத்திரம் தான் அல்லாஹ்வுக்கு இருப்பது என்று  அர்த்தமல்ல . இங்கு " அஹ்ஸாஹா " என்பதன் கருத்து : இவற்றை மனனம் செய்து இவற்றின் கருத்துக்களை சரியாக  விளங்கி , உறுதியாக உறுதிகொண்டு , அவற்றின் படி செயற்படுவதற்காகவே கூறப்பட்டுள்ளன . 

2 : 99 திருநாமங்கள் மாத்திரம் என்று இந்த திருநாமங்களை  மட்டிடவில்லை இவை ஆர்வமூட்டும் விதமாகவே கூறப்பட்டுள்ளன 
.
உதாரணமாக : ஒருவர் என்னிடம் நூறு ரூபாய்கள் உள்ளன " என்று கூறினால் அவரிடம் 100 ரூபாய்கள் மாத்திரம் தான் இருக்கின்றன என்பது அர்த்தம் அல்ல மாறாக அவரிடம் 100 ரூபாய்கள் இருப்பது போன்று கூறாத பணங்களும் உள்ளன என்பது தான் அர்த்தப்படும்.  


இதனை நபியின் பின்பவரும் துஆத் தொடர் மிகத்தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றது .

"  أسألك بكل اسم هو لك سميت به نفسك ، أو أنزلته في كتابك ، أو علمته أحداً من خلقك ، أو استأثرت به في علم الغيب عندك ) ."


وما استأثر الله به في علم الغيب لا يمكن أن يُعلم به، وما ليس معلوماً ليس محصوراً .

நபியவர்கள் " ( யா அல்லாஹ்) நீ உனக்கு நீயே சூட்டிய பெயர்கள் அனைத்தைக் கொண்டும் , அல்லது உனது வேதத்தில் இறக்கிய பெயர்களைக் கொண்டும் , அல்லது உனது படைப்பினங்களில் ஒருவருக்கு கற்றுக் கொடுத்த பெயர்களைக் கொண்டும் , அல்லது உன்னிடத்தில் உனது மறைவான அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயர்களைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன் " 

எனவே இந்த துஆ உள்ளடங்கிய ஹதீஸின் இறுதியான " நீ உன்னிடத்தில் மறைவான அறிவிலிருந்து தேந்ததெடுத்த பெயர்களைக் கொண்டும் " எனும் வாசகம் இங்கு எமக்கு தெரியாத பல பெயர்கள் அல்லாஹ்வின் மறைவான அறிவில் இருக்கின்றன என்பதை புலப்படுத்துகின்றது  , ஆகையால் அல்லாஹ்வுக்கு மட்டிடப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெயர்கள் மாத்திரம் இருக்கின்றன என்று நம்பிக்கை கொள்வது தவறாகும் , ஏனெனில் மறைவான அறிவில் இருப்பவை அறியப்படாத விடயம் , அறியாத விடயத்தை ஒருக்காலும் மட்டிட முடியாது , ஆக இறைவனுக்கு எண்ணிலடங்கா அழகிய திருநாமங்கள் இருக்கின்றன என்பதே சரியான கோட்பாடாகும் .
இதனையே இமாம் நவவி , இப்னுல் உஸைமீன் போன்ற பெரும் பெரும் மார்க்க அறிஞர்களும் கூறியிருக்கின்றனர் . 
இப்னு ஹஸ்ம் என்ற அறிஞரைத் தவிர மற்ற அனைத்து ஒட்டு மொத்த இமாம்களும் ஏகோபித்துக் கூறுவது யாதெனில் " அல்லாஹ்வுக்கு வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட திருநாமங்கள் இல்லை , மாறாக அவனது திருநாமங்கள் மட்டிட முடியாத எண்ணிலடங்காதவை ஆகும் .


எனவே இஸ்லாத்தை நேசிக்கும் உள்ளங்களே , இஸ்லாத்தை சிறந்த உலமாக்களை அணுகி தெளிவுகள் பெறுவதோடு , இவ்வாறான மேற்குறித்த போலிச் செய்திகளை சமூகத்தில் பரத்தி மூடநம்பிக்கையை ஏற்படுத்தாது இருப்போம். ஒரு விடம் எம்மிடம் வந்தால் அதனை சரியாக ஆராய்ந்து உரிய தெளிவுகளைப் பெற்று நாமும் பயனடைந்து ஏனையோருக்கும் பயனுள்ளவர்களாக இருப்போம் . 
வல்லவன் அல்லாஹ் வழிகேட்டிலிருந்து நேரிவழியை பிரித்தறியும் ஆற்றலைத் தருவதோடு உண்மையை உண்மையென்றும் , போலியை போலியென்றும் எமக்கு அடையாளப்படுத்துவானாக ! ஆமீன் .

அ(z)ஸ்ஹான் ஹனீபா 
12/04/2016
Disqus Comments