Tuesday, April 12, 2016

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயளி தற்கொலை

பாணந்துறை வைத்தியசாலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பாணந்துறை, வேகடை பிரதேசத்தைச் சேரந்த 59 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த நோயாளியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

(அத தெரண தமிழ்)

Disqus Comments