பிரிட்டன் அரசி எலிஸபெத்தின பிறந்த நாள் ஏப்ரல் 21 மற்றும் ஜூன் 11 ஆகிய தினங்களில் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் அடிப்படையில் பிரிட்டன் அரசி பிறந்த நாள் விழாவுக்காக சராசரியாக ஒவ்வொரு பிரிட்டன் பிரஜையும் ரூ.4,580 (42.98 பவுண்டு) செலவிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்காக சுமார் ரூ. 9,500 கோடியை (100 கோடி பவுண்டு) செலவிட உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும், குறிப்பாக ஆண்கள் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக ரூ.1,860 (20 பவுண்டு) செலவிட உத்தேசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.