2020ம் ஆண்டு கால்ப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள
மைதானத்துக்கு அருகாமைகயில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் $825 மில்லியன் பெறுமதியான
பலபொருள் அங்காடித் தொரு(மால்-MALL) தீக்கிரையாகிய சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை
பதிவாகியதாக கட்டார் உத்தியோக பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்மாண
வேலைகள் நடைபெறும் மேற்படி அங்காடித் தொரு(மால்-MALL) அல்- ரய்யான் விளையாட்டுக்கு
கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது எனவும், தீயணைக்கும் கருவிகள் உரிய இடத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு டிவிட்டரில் செய்தி
வெளியிட்டு இருந்தது.
கடந்த
2012ம் ஆண்டுக்கு பிறகு பாரிய சூப்பா் மார்க்கட்டுக்கள் மற்றும் கட்டிடத் தொகுதிகள்
கட்டிடக் கலை நிபுணா்களால் நிர்மாணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகது. மேலும் மேற்படி தீக்கிரையாகிய சம்பவம் தொடா்பான
வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. அவை கட்டிடத்தின் மேலால் புகை
வெளிப்படுவதைத் தெளிவாகக் காட்டுகின்றன.