நாட்டில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஆசன முன்பதிவு செய்ய முடியாது என்றும் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்தார்.
அதேவேளை, புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இன்று முதல் புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்றும் ராஜா குணதிலக மேலும் தெரிவித்தார்.
இதனை தவிர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்ஹ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(டெய்லி சிலோன்.)
