பல்கலைக்கழக விண்ணப்பங்களின் போது ஒன்லைன் முறைமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றவுடன் அது குறித்த தகவலை குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அடையக்கூடிய வீணான மனக்குழப்பங்களை தவரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலதாமதத்தினையும் குறைக்க முடியும்.