கடந்த ஐந்து நாட்களாக செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவந்து, இன்றிரவு முதல் மின் உற்பத்தியை மீள ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
நாளை முற்பகல் தொடக்கம் தேசிய மின் கட்டமைப்புடன் மொத்த மின் பிறப்பாக்கத்தையும் இணைக்க முடியும் எனவும் மின்சார சபை நம்பிக்கை வெளியிட்டது.
13,600 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அனல் மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.
கடந்த 5 வருடங்களுள் 25 தடவைகள் நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துள்ளது.