Tuesday, April 12, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 05 - இலங்கையின் தோ்தல்கள்.

இலங்கையின் தோ்தல்கள்
தோ்தல்
அரசியலில் மக்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகளை தோ்வு செய்ய வழங்கப்படும் சந்தா்ப்பமே தோ்தல் ஆகும்.
இலங்கையின் தோ்தல்கள் 5 வகைப்படும்.
1.       ஜனாதிபதி தோ்தல்
2.       பாராளுமன்றத் தோ்தல்
3.       மாகாண சபைத் தோ்தல்
4.       உள்ளூராட்சி  சபைத் தோ்தல்
5.       மக்கள் தீா்ப்பு(பொதுசன அபிப்பிராயம்.)

1.                   ஜனாதிபதி தோ்தல்
நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதியைத் தோ்வு செய்வதற்காக நடாத்தப்படும் தோ்தலின்  போது முழு நாடும் ஒரு தோ்தல் தொகுதியாக கணிக்கப்படும் தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குளில் 50%க்கு அதிகமான வாக்குகள் அல்லது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வேட்பாளா் வெற்றியடைவார். 

2.             பாராளுமன்றத் தோ்தல்
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தோ்தல் மாவட்டங்களாக     பிரிக்கப்பட்டு  196 உறுப்பினா்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அத்துடன் ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுவும் தேசிய ரீதியாக பெறுகின்ற மொத்த வாக்குளின் விகிதாசாரத்திற்கேற்ப தேசியப் பட்டியல் மூலம் 29 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதன் படி மொத்த உறுப்பினா்களின் மொத்த எண்ணிக்கை 196+29=225

3.             மாகாண சபைத் தோ்தல்.
1978ம் ஆண்டு 2வது குடியரசு அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது சீா் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது தான் மாகாண சபைகளாகும். நிர்வாக அதிகாரத்தை பரவலாக்கம் செய்வதே இதன் நோக்கம் ஆகும்.
o   மாகாண சபை நிரல்- மாகாண சபைகள் சட்ட இயற்ற அதிகாரம் உள்ள துறை
o   ஒருங்கிசை நிரல் – மத்திய அரசாங்கமும், மாகாண சபையும் சோ்ந்து சட்டம் இயற்றும் அதிகாரமுள்ள துறை
o   ஒதுக்கிய நிரல் – மத்திய அரசு மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள துறை.
v   மாகாண சபையின் கட்டமைப்பு
o   ஆளுனா் – 5 வருட பதவிக் காலத்துக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.
o   முதலமைச்சா் – மாகாண சபைத் தோ்தலில் பெற்றி பெற்ற கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுவார்.
o   உறுப்பினா்கள் – மாகாண சபைத் தோ்தலில் இருந்து தோ்வு செய்யப்படுவார்கள்.
o   அமைச்சா்கள் – மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினா் 4 போ் அமைச்சா்களாக தெரிவு செய்யப்படுவா்.
o   ஒரு மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்கள் ஆகும்.


4.          உள்ளூராட்சி சபைத் தோ்தல்.
தற்போதைய உள்ளூராட்சி சபை 3 அங்கமாக காணப்படுகின்றது.
உள்ளுராட்சி சபை அங்கம்
திருத்தச் சட்டம்
மா நகர சபை
1988 மா நகர சபை திருத்தச் சட்டம்
நகர சபை
1988 நகர நபை திருத்தச் சட்டம்
பிரதேச சபை
1987ன் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

மா நகர சபை கட்டமைப்பு
மாநகர சபை       -     நகர பிதா         -                துணை நகர பிதா மற்றும் நகா் சபை உறுப்பினா்          -               மாநகர சபை ஆணையாளா். -              ஏனைய உத்தியோகத்தா்கள்.

மா நகர சபை கட்டமைப்பு
பிரதேச சபை/நகர சபை  -        தவிசாளா்   -             செயலாளா் -                        ஏனைய உத்தியோகத்தா்கள்.



2011 வரையில் உள்ளூராட்சி சபைகள் எண்ணிக்கை
மாகாணம்
மாநகர சபை
நகர சபை
பிரதேச சபை
மொத்தம்
மத்திய மாகாணம்
4
6
33
43
கிழக்கு மாகாணம்
3
5
37
45
வட மத்திய மாகாணம்
1
0
25
26
வடமேல் மாகாணம்
1
3
29
33
வட மாகாணம்
1
5
28
34
சப்ரகமுவ மாகாணம்
1
3
25
29
தென் மாகாணம்
3
4
42
49
ஊவா மாகாணம்
2
1
25
28
மேல் மாகாணம்
7
14
27
48
மொத்தம்
23
41
271
335


5.       மக்கள் தீா்ப்பு(பொதுசன அபிப்பிராயம்.)
மக்கள் யாப்பு நடவடிக்கைகளில் நேரடியாக பங்கு பற்றுகின்ற சந்தா்ப்பமே பொதுசன அபிப்பிராய வாக்கொடுப்பே மக்கள் தீா்ப்பு என்று அழைக்கப்படுகின்றது. மக்கள் தீா்ப்பை நடாத்துவதற்கான முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே காணப்படுகின்றது. 

இம்முறையில் வாக்காளா்கள் ஒரு விடயம் தொடா்பாக ஆம் அல்லது இல்லை எனறு வாக்களிப்பதற்கு சந்தா்ப்பம் வழங்கப்படும். பொதுஜன வாக்களிப்பின் போது அப்பிப்பிராய வாக்கொடுப்பின் போது நாட்டின் மொத்த வாக்காளா்களில் 2/3 பங்கு அல்லது அளிக்கப்பட்ட வாக்குளில் பெரும்பான்மையைப் பெற்ற ஆலோசனையாகக் கருதப்பட்டு ஜனாதிபதியின் கையொப்பத்தால் ஆமோதிக்க்பட்டு பின்னா் சட்டமாக கருதப்படும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுசன வாக்கொடுப்பு முறை 1982ம் ஆண்டு டிசம்பா் மாதம் 22ம் திகதி தோ்தல் இல்லாமல் பாராளுமன்றத்தை 6 வருடங்கள் நீடிக்க அப்போதைய ஜனாதிபதி J.R.ஜெயவா்த்தன அவா்களால் நடாத்தப்பட்டது.
1982 Sri Lanka National Referendum
Extends life of parliament by six years
Results
Votes
 %
Yes check.svg Yes
3,141,223
54.66%
X mark.svg No
2,605,983
45.34%
Valid votes
5,747,206
99.63%
Invalid or blank votes
21,456
0.37%
Total votes
5,768,662
100.00%
Registered voters/turnout
8,145,015
70.82%




Disqus Comments