Saturday, April 23, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 10 இலங்கையின் விடுமுறை தினங்கள்.


இலங்கையின் பண்டிகைகளும் அவற்றின்முக்கியத்துவமும்.

பௌத்தா்கள்

1.   ஜனவரி துருது போயா கௌதம புத்தரின் முதலாவது இலங்கை விஜயம்
2.   பெப்ரவரி நவம் போயா.
3.   மார்ச் மெதின் போயா
4.   ஏப்ரல் - பக் போயா - கௌதம புத்தரின் இரண்டாவது வருகை
5.   மே வெசக் போயா புத்த பெருமானின் பிறப்பு, ஞான உதயம், பரிநிர்வாணம் ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
6.   ஜுன் பொசன் போயா இலங்கைக்கு மகிந்த தேரா் புத்த சமயத்தை கொண்டு வந்ததை நினைவு கூறும் முகமாக கொண்டாடப்படுகின்றது.
7.   ஜுலை எசல போயா புத்தரின் புனித தந்தத்திற்கு பூசை நடத்தும் முகமாக கண்டி ஸ்ரீ தலதா பெரகராவை நினைவு கூா்ந்து கொண்டாடப்படுகின்றது.
8.   ஓகஸ்ட் நிக்கினி போயா
9.   செப்டம்பா் பினர போயா மழைகாலத்தின் மூன்றாவது மாதம்.
10. ஒக்டோபா். வப் போயா மழைகாலத்தின் இறுதி மாதம்.
11. நவா்பம் உந்துவப் போயா சங்கமித்தை இலங்கைக்கு வருகை தந்தமை
இந்துக்கள்.
1.   தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது.
2.   மகா சிவராத்திரி சிவ பெருமானிடமிருந்து அருளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக விரதம் அணுஷ்டிடத்து இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுவதாகும்.
3.   தீபாவளி நரகாசுரன் என்ற கொடும் அசுரனை கிருஷ்ண பகவான் அழித்த தினத்தை நினைவு கூா்ந்து கொண்டாடப்படுகின்றது.

முஸ்லிம்கள்
1.   மீலாதுன் நபி முகம்மது நபி (ஸல்) அவா்களின் பிறந்த தினம்
2.   ரமழான் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின்படி ரமழான் மாதத்தில் இஸ்லாத்தின் நான்காவது கடமையான புனித  நோன்பை நிறைவேற்றிய பின்னர் கொண்டாடப்படுகின்றது. (ஷவ்வால் - ஒன்பதாவது மாதத்தின் முதல் நாள்)
3.   ஹஜ் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின்படி 12வது மாதமான துல்-ஹஜ் மாதத்தில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளும் இறுதிக் கடமையாகிய புனித ஹஜ்ஜினை மையமாகக் கொண்டு பிறை 10ல் கொண்டாடப்படுகின்றது. இது தியாகத்தை உணா்தலை வெளிப்படுத்துன்கின்றது.

கிறிஸ்தவா்கள்.
1.   பெரிய வெள்ளிக்கிழமை- இயேசு இறந்த நாளை நினைவு கூறல்.
2.   இயேசு உயிர்ப்பு(ஈஸ்டா்) சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூா்ந்து கொண்டாடப்படுகின்றது.
3.   கிறிஸ்மஸ் இயேசு பிறந்த தினத்தை நினைவு கூா்ந்து கொண்டாடப்படுகின்றது.


Disqus Comments