மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் -அவுஸ்திரேலியா அணிகள் மோதின.மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மெல் லான்னிங் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.
149 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.3 ஓவர்களில் முடிவில் 149 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வென்றது.
அதேசமயம் உலகக்கிண்ண அரங்கில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்திரேலியாவின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.