Monday, May 2, 2016

நேற்று தொழிலாளா் தினத்தை கொண்டாடிய மக்களுக்கு இன்று அரசாங்கத்தின் பரிசு - வரி அதிகரிப்பு.

பெறுமதி சேர்ப்பு வரி அல்லது வற் வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கு 11 சதவீதமாக காணப்பட்ட வற் வரி நூற்றுக்கு 15 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் - உயர் தொழில் நுட்ப உபகரணங்கள் - செப்பு கம்பி - தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்களுடன் தனியார் சுகாதரா சேவை தொடர்பாக இதுவரை இருந்த வரி விலக்கு இதனூடாக விலக்கப்படுகின்றது. இதனோடு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி திருத்தமும் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பாக நிகழ்காலத்தில் காணப்படும் நூற்றுக்கு 2 சதவீத வரி விகிதம் மாற்றமடையாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் தொலைத்தொடர்பு சேவை, மின்சார விநியோக மசகு பொருட்கள் மற்றும் இன்றைய நாளின் பின்னர் வீடமைப்பு தொடர்பான சிறப்பு திட்டங்கள் தவிர ஏனைய சிறப்பு திட்டங்கள் தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் போது காணப்பட்ட வரி விலக்கு விலக்கப்படவுள்ளது.

எனினும் இது தொடர்பாக அறிவிப்பதற்காக நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொறுப்பான அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்த வரி திருத்தம் நீர், மின்சாரம், கல்வி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக பாதிப்பினை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.
Disqus Comments