அஇமகா கட்சிக்குள் ஏட்பட்டிருக்கும் முறுகள் இப்போது மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கிவிட்டது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அஇமகா முக்கியஸ்தர்கள் பலர் தலைமையோடு முரண்பட்டுள்ளனர். இது தலைவருக்கும் முக்கிய உறுப்பினர்களுக்குமான நேரடி முரண்பாடு இல்லை. கட்சியில் உள்ள இரண்டாம் தலைவர்களுக்கும் புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் நடக்கும் பணிப்போராகும்..
இந்த பணிப்போரை தலைமை சரிசெய்யாமல் புதிதாக வந்த உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. அதனால் தலைவர் மீது ஆத்திரத்தில் உள்ளார்களாம் மூத்த உறுப்பினர்கள்..
அ
ந்த வரிசையில் அஇமகா கட்சியை திருக்கோணமலையில் வளர்ப்பதற்கு பாடுபட்ட DR ஹில்மி ஓரம் கட்டப்பட்டு அப்துல்லா மஃருபின் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதாம். இதனால் ஹில்மி மிகமன உளைச்சளுக்கு ஆளாகி வருகின்றாராம்.. ஒரு படி மேலே போய் யில் இணைவதற்கான பேச்சுவார்த்தையிலும் உள்ளாராம்..
அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர் அலியின் ஆதிக்கம் தாங்க முடியாத மூத்த அஇமகா உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளார்களாம்.
இதற்கு வழுக்சேர்க்கும் வகையில் அண்மையில் இணைந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஹமிட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் மீரான் ஹாஜியார் போன்றவர்கள் இதற்கு ஆதாரமாக உள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் ஹமீட் முஸ்லிம் காங்கிரஸில் இணைய அஇமகா முக்கிய உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த பலர் இணைவார்கள் என்று தெரிவித்தார்..
இதே போல அம்பாரை மாவட்டத்தில் அஇமகா வெடிக்கும் போர் வேறு விதமாக உள்ளது..
தேசியப்பட்டியல்
அஇமகா வசமுள்ள ஒரு தேசியப்பட்டியலை யாருக்கு வழங்க வேண்டும் என்ற போரோடு சிராஸ் ஜெமில் போர் உக்கிரமடைந்துள்ளது.
உக்கிரமடைந்துள்ளது என்பதைவிட போர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது என்று கூரலாம்.
.
தற்பொழுது சிராஸ் மீரா சாகிப் அஇமகா இருந்து கிட்டத்தட்ட வெளியேறி விட்டார் மிகவிரைவில் முகாவோடு இணைவார் என்று அவர் தரப்பு உறுதியாக தெரிவிக்கின்றது.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தேசியப்பட்டியல் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இருக்கும் ஒரு தேசியப்பட்டியலை ஜெமிலுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பும் இல்லை VC இஸ்மாயிலுக்கு வழங்க வேண்டும் என்று மறுதரப்பும் இல்லை SSP மஜித் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் கூறிவருகின்றதாம். இதைவிட இன்னொரு தரப்பு தலைவர் செயலாளர் முரண்பாட்டை நீக்க செயலாளருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகின்றனவாம்.
ஆனால் அஇமகா தலைமை வேறுவிதமாக சிந்திக்க துவங்கி உள்ளதாம்..
அஇமகா எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் தன் அரசியல் பயணத்தை தொடர்வதற்கான மந்திரக்கோலாக இந்த தேசியப்பட்டியலை பயன்படுத்த தலைமை நினைக்கின்றதாம்.
வன்னியில் ரிசாட் அமைச்சரின் செல்வாக்கு நாள்தோறும் படுபாதாளத்துக்கே சென்று கொண்டிருக்கின்றது. எனவே மீண்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றால் அதற்கு சாத்தியமான ஊர் புத்தளம் தான்.
புத்தளத்தை தன் கோட்டையாக்க நினைத்தே ஒரு வருடகால அவகாசத்துக்கு தேசியப்பட்டியலை நவவி அவர்களுக்கு வழங்கி வைத்தார்..
ஆனால் புத்தளத்து அரசியல் தலைகீழாக மாறி உள்ளது..
அதாவது புத்தளம் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான சகல விடயங்களும் நிறைவடைந்துவிட்டது இன்னும் ஓரிரு வாரத்தில் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸில் இணைவார்..
பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தால் புத்தளத்தின் ஆதிக்கம் முகாவசமாகும் என்ற அச்சத்தில் ரிசாட் அமைச்சர் உள்ளார்..
புத்தளத்தில் தன் ஆதிக்ஙத்தை சொலுத்த வேண்டும் என்றால் தொடர்ந்து நவவி பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்க வேண்டும் என்பது ரிசாட் அமைச்சரின் முடிவு..
ரிசாட் அமைச்சரின் இந்த முடிவு அம்பாரை தேசியப்பட்டியல் விரும்பிகளுக்கு தெரியவந்துள்ளதாம்.
எப்படியும் தனக்கு தேசியப்பட்டியல் கிடைக்காது என்று தெரிந்த ஜெமில் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைய தூது அனுப்பி உள்ளாராம்...
எப்படியாவது சிராஸ் முகாவில் இணைவதற்கு முன் ஜெமில் இணையவேண்டும் என்று கடும் போட்டி நடக்கின்றதாம். காரணம் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் ஆகும்.
அம்பாரை மாவட்டத்தில் அஇமகா கட்சிக்கு என்று ஒரு நிரந்தர வாக்கு வங்கி இல்லை என்பதே இதற்கு காரணம்..
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அஇமகா விழுந்த வாக்குள் அஇமகா வாக்கு வங்கி அல்ல அது முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான வாக்கு வங்கியும் அதாவுல்லா நௌசாட் பேரியல் ஆதரவான வாக்கு வங்கியும் ஆகும்..
கடந்த தேர்தலில் அதாவுல்லா பேரியல் நௌசாட் மஹிந்தவை ஆதரித்த காரணத்தால் அதாவுல்லாவுக்கும் போடாமல் முஸ்லிம் காங்கிரஸுக்கும் போடாமல் மயிலுக்கு போட்டார்கள்..
எனவே மயிலின் வாக்கு வங்கி நிறந்தரமில்லை..
இதை கருத்தில் கொண்டு சில முக்கிய புள்ளிகள் கட்சிமாறுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளனர்..
இதற்கு வழுச்சேர்க்கும் வகையில்தான் அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பேசியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய்கட்சி திரும்ப வேண்டும் என்று...
பொதுவாக ரஊப் ஹக்கீம் இப்படி பேச காரணம் இவர்களின் சமிக்கைதான்..
UL nowfar
காத்தான்குடி