Saturday, September 17, 2016

பெரஹரவில் கலந்துகொண்ட யானை தாக்கியதில் பெண் பலி - இரத்தினபுரியில் சம்பவம்.


இரத்தினபுரி, மஹ சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற பெரஹரவில் கலந்து கொண்டிருந்த யானை ஒன்று குழம்பி தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்று (16) இரவு பெரஹர ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர, கெட்டபெர விகாரையின் வருடாந்த பெரஹர நிகழ்வின் போது இடம்பெற்ற அனர்த்தத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

பெரஹர ஆரம்பமாகி சிறிது நேரத்தில், யானை ஒன்று குழம்பியுள்ளதாக வதந்தி பரவியதையடுத்து, ஏற்பட்ட அமைதியின்மையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

இதில் காயமடைந்தவர்கள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
Disqus Comments