ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தற்போதைய சூழ்நிலையில் சிரமமானது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றினார். இந்த வைபவத்தில் அம்பகமுவ கோரளையைச் சேர்ந்த சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மத்தியில் 40 லட்சம் ரூபா பெறுமதியான உர நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் உரிய வரம்புகளின் கீழ் தொழிற்சங்க அமைப்புக்களுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகையில் பொருளாதாரம் பற்றிய புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியம்.
சமகாலத்தில் தேயிலைக் கொழுந்தின் விலை மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதில் தோட்டத்துரைமார் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். எனினும், சிறிய அளவிலான தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கில் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
