தனது மகளின் காதலனை திருமணம் குறித்து பேச வருமாறு வீட்டிற்கு வரவழைத்து அவரை வெட்டி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் அந்த பெண்ணின் தந்தை. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி என்பவர் நர்சிங் முடித்துவிட்டு திண்டுகல்லில் வேலை பார்ர்த்து வருகிறார்.
இந்நிலையில் கஸ்தூரிக்கும் திண்டுக்கல் மாவட்டம்நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தனது மகள் கஸ்தூரி வேறு சாதியை சார்ந்த ஒருவரை காதலித்தது கஸ்தூரியின் தந்தையான லட்சுமணனுக்கு பிடிக்காததால் கஸ்தூரியின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் அந்த தனது மகளின் காதலனான சிவகுருநாதனை தனது மகளுடன் சேர்த்து வைப்பதாகவும், திருமணம் பற்றி பேசுவதற்கு தனது வீட்டிற்கு வருமாறும் சிவகுருநாதனை தனது வீட்டிற்கு லட்சுமனன் அழைத்துள்ளார்.
இதை சங்கரன்கோவிலில் உள்ள கஸ்தூரியின் வீட்டிற்கு வந்த சிவகுருநாதனை லட்சுமணன் மறைத்துவைத்திருந்த அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத
சிவகுருநாதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து லட்சுமணன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்து போலீஸார்லட்சுமணனிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சிவகுருநாதனின் உடல் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது .
