இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக, அதன் பிரதி பணிப்பாளராக இருந்த சுனேத்ரா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஏற்றுக் கொண்டார்.
இதனடிப்படையில் குறித்த பதவி வெற்றிடத்திற்கு இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
