Tuesday, October 18, 2016

ஸ்ரீ-லங்கன் எயார்லைன்ஸ் யில் Samsung Galaxy Note 07 கொண்டு சொல்ல தடை செய்யப்பட்டுள்ளது.


விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து விமானங்களில் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

முன்னதாக அமெரிக்கா இதுபோன்றதொரு தடை உத்தரவை அந்த நாட்டு விமானங்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விதித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செல்லிடப்பேசிகளில் பொருத்தியுள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடிப்பதாக உலகின் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, 25 இலட்சம் கேலக்ஸி நோட்-7 ரக செல்லிடப்பேசிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்ததுடன், அதன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments