Monday, November 21, 2016

இறக்காமம் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 27 மில்லியன் -முதலமைச்சரால் ஆரம்பம்

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  ஆரம்பக் கல்வி கற்றல் வள நிலையம் மற்றும் ஆசிரியர் விடுதிகளுக்கான   அடிக்கல் நாட்டும்  நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அழைப்பின் பேரில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீமின்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹம்மட பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

வரிப்பத்தான்சேனை லீடர் ஜுனியர் பாடசாலைக்கு 18 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பக் கல்வி கற்றல் வள நிலையத்திற்கான இருமாடிக் கட்டிடம்,    வாங்காமம் ஒராபிபாஷா வித்தியலயத்திற்கு  4.5 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதி, இலுக்குச்சேனை அரசிலன் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு 4.5 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதி ஆகியவற்றுக்கான வேலைத்திட்டம் வைபகரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,  மெத்தனந்த சில்வா, இறக்காமம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் எஸ்.ஐ.மன்சூர், இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.நஸீர், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜாவிர், ஆர்.எம்..நயிசர், முன்னாள் அக்கரைப்பற்று நகர சபை எதிர்கட்சி தலைவர் ஹனீபா மௌலவி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






Disqus Comments