Friday, November 18, 2016

அரச சேவையில் எழுதுவினைஞருக்கான 4000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அரச சேவையில் எழுதுவினைஞருக்கான 4000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் தலைமையகங்களில் இந்த வெற்றிடங்கள் காணப்படுவதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கடந்த வருடம் நடைபெற்ற அரச சேவை எழுதுவினைஞர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 1500 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நேர்முக பரீட்சையை விரைவில் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Disqus Comments