Friday, November 18, 2016

பரசிற்றமோல்(Paracetamol) மாத்திரையால் ஏற்படும் ஆபத்தான பக்கவிளைவுகள்!!!

நம்மில் பலரும் சிறிய நோவு தொடக்கம் காய்ச்சல் மற்றும் மாதவிடாய் வலிகளுக்கு உடனடியாக பாரசிற்றமோலை உட்கொள்ளுகிறோம்.
எனவே இந்த மாத்திரையால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி அறிந்திருப்பது முக்கியமாகும்.
உட்கொள்ள வேண்டிய அளவு
உடல் நிறையின் ஒவ்வொரு கிலோ கிராமிற்கும் 15மில்லி கிராம்.
50கிலோ எடையுள்ளவருக்கு தேவையான அளவு -750மில்லி கிராம் (750mg )

ஒரு நாளில் மேற்குறிப்பிட்ட அளவில் நான்கு முறைகள் மாத்திரமே பரசிற்றமோலை குடிக்கமுடியும்.
நான்கு தடவைகளுக்கு மேல் குடிக்கக்கூடாது.
ஒரு மில்லி சிறப்பில் 24 மில்லிகிராம் பரசிற்றமோல் உள்ளது.
பக்க விளைவுகள்
பரசிற்றமோல் அலர்ஜி உள்ளவர்கள் அதனை உள்கொள்ளக்கூடாது.
அத்துடன் அலர்ஜி உள்ளவர்கள் உட்கொள்ளும் போது உடலில் எரிவு, அரிப்பு தன்மை,
உடல் சருமம் தடித்தல்
வாந்தி
மயக்கம் போன்றன ஏற்படும்.
அலர்ஜியினால் பல நாடுகளில் மரணம் கூட ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உங்கள் உடல் நிறைக்கு ஏற்ப குறிக்கப்பட்ட அளவைவிட 8 மடங்கு அதிகமாக உட்கொண்டால் ஈரல் செயலிழப்பு ஏற்படும்.
10 மடங்கிற்கு அதிகமாக உட்கொண்டால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
அதாவது 50கிலோ எடையுடையவர் 7500மில்லிகிராம் பரசிற்றமோலை (15 மாத்திரைகள் )உட்கொண்டால் உயிரிழப்பு ஏற்படும்.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”
Disqus Comments