Friday, November 25, 2016

முதலமைச்சரினால் மட்டக்களப்பு வலயத்திலுள்ள 74 பாடசாலைகளுக்கு தளபாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட 74 பாடசாலைகளுக்கு தளபாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள்  கிழக்கு  மாகாண முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் மற்றும் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயங்களில் இடம்பெற்றன.

இதன் போது  மட்டடக்க்ளப்பு  வலயத்திலுள்ள  74  பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன்  இதில்  காத்தான்குடி கோட்டப்பாடசாலைகள்  30ற்கும் ஓட்டமாவடி கோட்டப்பாடசாலைகள் 20க்கும் மற்றும் ஏறாவூர் கோட்டப்பாடசாலைகள் 18 இற்கும் உபகரணங்கள்  கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால்  வழங்கிவைக்கப்பட்டன

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் சேகு  அலி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




Disqus Comments