Sunday, November 20, 2016

A தர வைத்தியசாலையாக தரமுயா்கின்றது கற்பிட்டி வைத்தியசாலை - ராஜித, றிஷாட் கூட்டு முயற்சி

(முஹ்சி சோ்) B தரத்திலான கற்பிட்டி வைத்தியசாலையினை A தர வைத்தியசாலையாக தர முயர்த்துவதன் அவசியம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனிடத்தில் நாம் முன் வைத்த கோரிக்கைக்கு சாதாகமான பதில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான கடிதங்கள் பகிரப்பட்டுள்ளன.
கற்பிட்டி வைத்தியசாலையின் பணிகள் மிகவும் முக்கியமானதாக உள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் இந்த வைத்தியசாலையினை நாடி வருவதாகவும் தற்போதுள்ள வைத்தியசாலையின் வசதிகள் போதுமானதாக இல்லை என அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவிக்கப்பட்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் முறையிடச் செய்யப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து இவ்வைத்தியசாலையினை A தரத்திற்கு தரமுயர்த்தி தருமாறு விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு
(MS/14/2015/B இலக்க 2016-10-27) ஆம் திகதி கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

அதன் படி வடமேல் மாகாண உதவி சுகாதார பணிப்பபாளர் வைத்தியர் கினீஸா அமரசிங்க அவர்களினால் 2016.11.11 ஆம் திகதி இடப்பட்டு புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் கற்பிட்டி வைத்தியசாலையை தரமுயர்த்தல் தொடர்பான அறிக்கையினை தமக்கு சமர்ப்பிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
ما شاء ألله الحمد لله


Disqus Comments