(கட்டார் பொது மன்னிப்புக் காலம் முடிய இன்னும் வெறும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. சட்ட விரோதமாக அனுமதியில்லாமல் தங்கியிருப்பவா்கள் இன்னும் 10 நாட்களுக்குள் கட்டாரை விட்டு சென்று விடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றாரகள். மன்னிப்பு காலம் முடிந்த பின் அனுமதியில்லாமல் தங்கிருப்பதவா்கள், மற்றும் அவ்வாறு தங்கியிருப்பவா்களுக்கு வேலை வழங்குபவா்கள் பாரிய சட்டப்பிரச்சினைகளை எதிா்கொள்ள நேரிடும் என கட்டார் உத்தியோக பூா்வ செய்திகள் தெரிவிக்கின்றன.)
கட்டார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோக பூர்வ முகநூல் பக்க செய்தியில் கட்டார் நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Resident Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கட்டார் நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதற்கான பொது மண்ணிப்பிணை வழங்கவுள்ளதாக கட்டார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2016 செப்டம்பர் 1 முதல் 2016 டிசம்பர் 1 வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள் வெளியேறுவோருக்கு பொது மண்ணிப்பு வழங்கப்பட உள்ளதாக கட்டார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
12 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான பொதுமண்ணிப்பு காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு கட்டாரின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 650,000 இருந்த பொழுது இவ்வாறானதொரு பொதுமன்னிப்பினால் சுமார் 6,000 பேர் பயன் அடைந்தனர். எனினும், இவ்வருட ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2,560,000 பேரைக் கொண்டதாக மொத்த சனத்தொகை காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்குறிப்பிடப்பட்ட சட்ட விரோத குடியிருப்பாளார்கள் Search and Follow up Department திணைக்களத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை ஆங்கிலத்தில் பாா்வையிட கீழே உள்ள லிங்குகளை நாடவும்.