கற்பிட்டி பிரதேச சபைக்கு உற்பட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு அங்கத்தவர்களுக்கான விஷேட கூட்டம் ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் M.N.M.Nasmi தலைமையில் நேற்றைய தினம் (18.11.2016) அன்று வெள்ளிக் கிழமை இரவு கற்பிட்டி Seyaf மண்டபத்தில் இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் M.N.M.Nasmi அவர்களினால் கற்பிட்டிக்கும் கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குள்ளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் சம்மந்தமாகவும் செயற்குழு அங்கத்தவர்களினாலும் பெரியார்களினாலும் பாராட்டப்பட்டது.
மேற்படி நிகழ்வில் உரையாற்றிய.. ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் M.N.M. Nasmi அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M. Akmal அவர்களுக்கும் அவருக்கு உதவிய ஐ.தே.கட்சியின் அங்கத்தவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததோடு இவ்வாறான கூட்டங்கள் எதிர்வரும் காலங்களில் புத்தளம் நகர சபை, வனாத்துவில்லு பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெறும் என்று கூறி இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.
அத்துடன் இக்கூட்டத்துக்கு வருகை தந்த அனைவர்களுக்கும் ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal அவர்களினால் இரவு நேர உணவும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.