பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த யோசனை இன்று கூடிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டபோதே, இந்த அனுமதி கிட்டியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதற்கமைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.