இலங்கை பரீட்சைத் திணைக்களம்
க.பொ.த. (சா.தர)ப் பரீட்சை - 2016 டிசெம்பா் புதிய, பழைய பாடத்திட்டம்.
மேற்படி பரீட்சை 2016 டிசெம்பா் 06ம் திகதி ஆரம்பமாகி டிசெம்பா் மாதம் 17ம் திகதி வரை நடாத்தப்படும் என்பது இத்தால் அறியத்தரப்படுகின்றது.
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபா்கள் தமது பாடசாலை இலக்கம், பாடசாலையின் பெயா், முகவரி போன்ற உரிய தகவல்களையும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாயின் விண்ணப்பப்படிவத்தின் பிரதி, விண்ணப்பப் படிவத்தை அனுப்பிய பதிவுத் தபாலின் பற்றுச்சீட்டு மற்றும் பரீட்சைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான தபால் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் பரீட்சை ஆளையாளா் நாயகம், பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை, இலங்கை பரீட்சை திணக்களம், தபாற் பெட்டி 1503, கொழும்பு என்ற முகவரிக்கு உடனடினாக கடிதம் மூலம் அறியத்தர வேண்டும். அல்லது நேரடியாக வருகை தந்தும் பெற்றுக் கொள்ள முடியும். பாடசாலை அதிபா்களும் தனிப்பட்ட பரீட்சாரத்திகளும் இது தொடா்பாக அதிகூடிய கவனத்தைச் செலுத்தும்படி இத்தால் அறியத்தரப்படுகின்றது.