கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியினால் நாளைய தினம் ஏறாவூரில் 34 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியினால் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நீண்டகாலமாக முறையான பொதுச் சந்தையொன்று இன்றி அல்ல்லுற்ற ஏறாவூர் சந்தை வர்த்தகர்கள் தமக்கு பொதுச் சந்தையொன்று அமைத்துத் தர வேண்டுமென முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுத்த்தையடுத்து அதற்காக 20 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு நாளை (09) அதற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.
எவ்வாறாயினும் இந்த அபிவிருத்தி முயற்சிகளை தடுப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேறகொண்ட போதும் இறைவன் துணையுடன் மக்களுக்கான பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன
அத்துடன் கலாசார மையம் மற்றும் நூலகங்க கட்ட்டத்திற்கு 12கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நாளை இடம்பெறவுள்ளதுடன் ஏறாவூர் பெண்கள் சந்தைக்கான நிர்மாணப் பணிகளுக்கு 2 கோடி ரூபா நிதி நீர் வழங்கல் வடிகலைமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நாளை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணம் முழுவதும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது