Saturday, December 10, 2016

தவ்ஹீத் ஜமாத் பாலமுனை கிளை அலுவலகம் காடையர்களினால் தீ வைத்து எறிப்பு(படங்கள்)

தவ்ஹீத் ஜமாத்தின் பாலமுனை கிளை வியாழன்  8 சுமார் 12.00 மணியளவில் காடையர் கும்பலினால் தீ வைத்து எறிக்கப் பட்டுள்ளது.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரத்தினை எதிர்கொள்ள முடியாத அசத்தியவாதிகள் எப்படியாவது ஏகத்துவக் கொள்கை பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்க்காக இது போன்ற ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் நம்மை தாக்குவது, நமது அலுவலகங்களை தாக்குவது, அலுவலகங்களை தீ வைத்து எரிப்பதும் இது முதல் தடவையல்ல. சத்தியத்தை அழிக்க வேண்டுமென்ற கற்பனையில் இவர்கள் செய்யும் இக்காரியங்களினால் ஏகத்துவம் இன்னும் வீரியம் பெற்று வளருமே ஒழிய அழிந்து விடாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் இதற்க்கு முன்பும் பல ஊர்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவை அனைத்தும் இன்று மக்கள் திரல் நிரம்பி வழியும் இடங்களாக மாறியுள்ளது.
இதே போல் ஓழைக் குடிசையாக இருந்த பாலமுனை கிளை இவர்களின் இந்த செயல்பாட்டினால் இன்னும் அதிகமான வளர்சியை அல்லாஹ்வின் அருளினால் பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதே நேரம், கிளைக் காரியாலயத்தை எரித்தவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கிளை நிர்வாகம் சார்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அஸீம் கிலாப்தீன்)







Disqus Comments